தென்காசி அருகே அரசு பஸ் – பைக் மோதி கல்லூரி மாணவர் பலி
1 min read
College student killed in collision between government bus and motorcycle near Tenkasi
25.11.2026
தென்காசி அருகே சிவராமபேட்டையில் அரசு பேருந்து பைக் மீது மோதியதில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி அருகே உள்ள இடைகால் சங்குபுரம் பகுதியை சேர்ந்த கனக ராஜ் என்பவரது மகன் முத்துக்குமார் (வயது 19). இவர் சுரண்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலையில் பைக்கில் கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை சிவராம பேட்டை அருகே தென்காசிக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்தும் பைக்கும் எதிர்பாரத விதமாக நேருக்கு நேர் மோதியதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆய்க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த முனியசாமி என்பவரது மகன் பாலமுருகன் (வயது 37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.