November 26, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில்: இரத்ததான கூட்டமைப்பு கலந்துரையாடல் கூட்டம்

1 min read

n Tenkasi: Blood Donors’ Association Discussion Meeting

25/11/2026
தென்காசி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பு சார்பாக, தென்காசி அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் அவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் ரயில் நிலையம் எதிரே உள்ள தென்காசி நம்பி கிருஷ்ணா ஹாலில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் இரத்த தேவையை விரைந்து பூர்த்தி செய்வது, அவசர காலத்தில் உரிய நேரத்தில் இரத்தம் வழங்குவது, இரத்தக் கொடையாளர்களின் நலனை பேணுவது மற்றும் இரத்ததான ஒருங்கிணைப் பாளர்கள் – இரத்த வங்கி மருத்துவர்கள் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் தலைவர் முகம்மது அன்சாரி முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பின் செயலாளர் சாம்பவர் வடகரை கோபி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி கிளப் குற்றாலம் மெட்ரோவின் தலைவர் என்.வெங்கடேஸ்வரன் மற்றும்
ரோட்டரி கிளப் குற்றாலம் மெட்ரோவின் மூத்த நிர்வாகி
கௌரி ஆர்.முருகன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் துணைத் தலைவர் சரவணன் துணைப் பொருளாளர் முகமது அன்சர் ஒருங்கிணைப்பாளர்கள் முகமது முஸ்தபா, மணிகண்டன், பாக்யராஜ், ஜாபர் ஷெரீப்,பாதுஷா, கனி மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மணிமேகலை, ஆனந்தி, முகம்மது அலி, சிராஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

புதிய இரத்தக் கொடையாளர்களை உருவாக்கும் விதமாக, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
-மாவட்ட இரத்ததான கூட்டமைப்பு சார்பாக மக்கள் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து திட்டமிடுதல்.
-ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு இரத்ததான ஒருங்கிணைப்பாளரை உருவாக்குதல்,
இந்த கூட்டமைப்பு சார்பாக இரத்ததான முகாம்களை அதிகப்படுத்துதல். தொடர் இரத்தக் கொடையாளர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

-தொடர் இரத்ததான சேவை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பாக அடையாள அட்டை வழங்குவது குறித்து கோரிக்கை, இரத்ததான கூட்டமைப்பில் மேலும் பல ஒருங்கிணைப்பாளர்களையும், அமைப்புகளையும் இணைப்பது.
இறுதியாக, இரத்ததான கூட்டமைப்பின் ஆலோசகர் முகம்மது காமில் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *