November 27, 2026

Seithi Saral

Tamil News Channel

குஜராத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது-விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த சதி

1 min read

Pakistani terrorist arrested in Gujarat – plot to attack Air Force base uncovered

27/11/2026
குஜராத்தின் வதோதராவில் உள்ள நம் விமானைப்படை தளம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியை அம்மாநில பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி, குஜராத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வருவதாக அம்மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய உளவு அமைப்புகளுடன் இணைந்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கடந்த ஆறு மாதங்களாக அந்நபரை கண்காணித்து வந்தனர்

இந்நிலையில், குஜராத்தின் வதோதரா அருகே உள்ள ஜரோத் பஸ் நிலையம் அருகே அந்நபரை, பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வடகிழக்கு மாநிலமான அசாமின் கரீம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த முகமது சஹாருல் இஸ்லாம் கபீருதீன், 22, என தெரியவந்தது.
அவரிடம் இருந்து ஏ.கே., 47 ரக துப்பாக்கி, 23 தோட்டாக்கள், ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் கொடி, மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த ஓராண்டாக இவர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. புதிய மொபைல் போன் வாங்கவும், இவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.

அசாமில் இருந்து ரயில் மூலம் குஜராத்தின் வதோதரா வந்த இவர், நம் விமானப்படை தளத்தின் நுழைவாயில் மீது தாக்குதல் நடத்த, அப்பகுதியை நேரில் சென்று நோட்டமிட்டதுடன், பல முக்கிய இடங்கள் குறித்த விபரங்களையும் சேகரித்து, புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இவரது மொபைல் போனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

‘யூ – டியூப்’ மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஏ.கே., 47 ரக துப்பாக்கியை இயக்கும் பயிற்சி பெற்றதும் தாக்குதல் நடத்தியபின் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமானது. இதைத்தொடர்ந்து, கைதான நபர் மீது உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பயங்கரவாத எதிர்ப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *