November 28, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி குமார்பாண்டியன் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

1 min read


Life imprisonment for two in the Tenkasi Kumarapandian murder case

28.11.2026
தென்காசியில் இந்து முன்னணி நிர்வாகி குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மதுரை கலவர வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த இந்து முன்னணி நகரச் செயலாளராக இருந்த குமரபாண்டியன் கடந்த 2006-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவரது தரப்பைச் சேர்ந்த சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தென்காசி மவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்ற அப்துல்லா (வயது 46), தென்காசி வடக்கு மவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த ஹனிபா என்ற நாகூர் ஹனிபா (வயது 42) ஆகிய இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை கலவர வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி நந்தினி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், இரண்டாவது குற்றவாளியான ஹனிபாவுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கந்தசாமி ஆஜரானார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *