November 30, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழகக் கூட்டம்

1 min read

Meeting of the Kadayam Thiruvalluvar Kazhagam

28.11.2026
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் திங்கள் சிறப்புக் கூட்டம் வருகிற இன்று (சனிக்கிழமை) மாலை கடையம் வடக்குத் தேர் தெருவில் உள்ள கே.எஸ்.எஸ். சிற்றரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தென்றல் ஆ. சேதுராமலிங்கம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். “கண்ணதாசன் தேடிய கண்ணன்” என்ற தலைப்பில் கல்லூரிக் கல்வி முன்னாள் இணை இயக்குநர் அ. சுப்பையா பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
“இளசைக் கவிஞனின் வளசை வாழ்வு” என்ற தலைப்பில் எழுத்தாளர் வே. ஐயப்பன் உரையாற்றினார்.
சேவாலயா – செல்லம்மா பாரதி கற்றல் மைய (கடையம்) மாணவியர் இறைவணக்கம் பாடினார்கள்.
கிருஷ்ணபொன்ஜோதி வரவேற்றார். சங்கரநாராயணன் குறள் சிந்தனை பேசினார். ரா. சங்கர கோமதி நன்றி கூறினார். திருவள்ளுவர் கழக செயலாளர் கல்யாணி சிவகாமிநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடையம் திருவள்ளுவர் கழக செயற்குழு உறுப்பினர் சி. கணபதி விருந்து போற்றல் செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *