November 30, 2026

Seithi Saral

Tamil News Channel

ந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை தொகுதிகள் உயரும்? உத்தேச பட்டியல்

1 min read

Which states will see an increase in the number of constituencies? A tentative list

28.11.2026
இந்திய நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளின் அதிகரிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு செய்வதற்கான அரசியல் சாசன திருத்த சட்ட மசோதாவுடன் சேர்த்து கொண்டு வரப்பட்டது. மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றால் 132வது அரசியலமைப்பு சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அரசியலமைப்பு சாசன திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். அதன்படி நாடாளுமன்றத்தில் 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் பாஜக கூட்டணிக்கு இவ்வளவு ஆதரவு இல்லாததால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு திமுக உள்பட அப்போதைய ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன. ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் அடிப்படையிலான தொகுதி மறுவரையரை மசோதாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை. இரண்டும் ஒன்றாக கொண்டு வரப்பட்டதால் வேறு வழியின்றி இரண்டு வீழ்த்தப்பட்டது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது. அனைத்து மாநிலங்களுக்கு சரிக்கு சமமாக 50 சதவீதம் என்ற அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

ஆனால் மத்திய அரசு வாய்மொழியாக அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தாலும் அதுதொடர்பான அம்சம் மசோதாவில் இல்லை. இதனால் திமுக உள்பட அப்போது ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவளிக்கவில்லை.

இருப்பினும் மத்திய அரசு இந்த மசோதா மற்றும் சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை லோக்சபாவும், டிசம்பர் 2 முதல் டிசம்பர் 3 வரை ராஜ்யசபாவும் கூட உள்ளது.

இந்த சிறப்பு கூட்டத்தொடரில் 3 மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளது. ஒன்று 132வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா (மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது) இன்னொன்று மாநிலங்களில் தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026, 3வது யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா 2026 கொண்டு வரப்பட உள்ளது.

இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரலில் தாக்காலன தொகுதி மறுவரையறை (முதல்) மசோதா 2026 திருத்தம் செய்யப்பட்டு தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026 (Delimitation (Second) Bill 2026) என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சரிக்கு சமமாக 50 சதவீதம் வரை லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம் 543 லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை உயர உள்ளது. இதில் மாநிலங்களுக்கான லோக்சபா தொகுதி 515 ஆகவும், யூனியன் பிரதேசங்களுக்கான லோக்சபா தொகுதி 35 ஆகவும் இருக்கும். இதனை 2051ம் ஆண்டு வரை மாற்றம் செய்ய முடியாது. அதுவரை இந்த தொகுதகிளின் எண்ணிக்கை அப்படியே தான் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த மசோதாக்களை நிறைவேற்றிய பிறகு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட உள்ளது. அந்த ஆணையம் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..

மாநில வாரியான உத்தேச மக்களவைத் தொகுதிகள் (50% உயர்வு மாதிரி)

மாநிலம் / யூனியன் பிரதேசம்தற்போதைய தொகுதிகள்உத்தேசத் தொகுதிகள்கூடுதல் தொகுதிகள்
உத்தரப் பிரதேசம்80120+40
மகாராஷ்டிரா4872+24
மேற்கு வங்காளம்4263+21
பீகார்4060+20
தமிழ்நாடு3959+20
மத்தியப் பிரதேசம்2943+14
கர்நாடகா2842+14
குஜராத்2639+13
ஆந்திரப் பிரதேசம்2538+13
ராஜஸ்தான்2538+13
ஒடிசா2131+10
கேரளா2030+10
தெலங்கானா1726+9
அசாம்1421+7
ஜார்க்கண்ட்1421+7
பஞ்சாப்1320+7
சத்தீஸ்கர்1116+5
ஹரியானா1015+5
டெல்லி711+4
உத்தரகாண்ட்58+3
ஜம்மு & காஷ்மீர்57+2
இமாச்சலப் பிரதேசம்46+2
அருணாச்சலப் பிரதேசம்23+1
கோவா23+1
மணிப்பூர்23+1
மேகாலயா23+1
திரிபுரா23+1
சண்டிகர்12+1
மிசோரம்12+1
நாகாலாந்து12+1
புதுச்சேரி12+1
சிக்கிம்12+1
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ220

(குறிப்பு: அந்தமான் நிக்கோபார், லடாக், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான இறுதி மாற்றங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை).

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *