சங்கரன்கோவில் யானை கோமதிக்கு உடல்நலம் ஆய்வு
1 min read
Health check-up for Gomathi, the elephant at Sankarankovil
28.11.2026
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாரயணர்சாமி திருக்கோவில் யானை கோமதியின் உடல்நலம் பற்றி ஆய்வு செய்த மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் பலமுறை யானைக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர திருக்கோவில் நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் யானை கோமதியை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கோவில் அதிகாரிகளை எச்சரிக்கை விடுத்தார்*.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலில் உள்ள யானை கோமதியின உடல் எடை, வாய், கால், நாக்கு, உடலின் வெப்பம், நடைபயிற்சி மேற்கொள்ளப்படுகிறதா என மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தலைமையில் வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர்….
தொடர்ந்து யானை கோமதியின் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், யானைக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகள் குறித்து திருக்கோவில் நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை
எனவே யானைக்கு ஏதாவது நடந்தால் திருக்கோவில் நிர்வாகம் தான் பொறுப்பேற்க நேரிடும் மேலும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படு எனவும் இது தொடர்ந்தால் யானை கோமதியை திரும்ப பெறுவதற்கு அரசுக்கு கடிதம் அனுப்ப நேரிடும் என மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தினார்.