திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேட்டி
1 min read
Lighting the lamp at Tirupparankundram brings joy: Retired judges share their thoughts
28.11.2026
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது என்றும், இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை என்றும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வுப்பெற்ற நீதிபதி வைத்தியநாதன் கூறியிருக்கிறார். எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் தீபம் ஏற்றப்பட்டது என்றும் ஓய்வுப்பெற்ற நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.
தீபம் ஏற்றிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்தியநாதன் கூறியதாவது; “இன்று மாலைக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நாங்கள் அதற்கான நடவடிக்கையை எடுத்தோம். அடுத்தக்கட்ட நிர்வாக நடவடிக்கை குறித்து நானும், பார்த்திபனும் அமர்ந்து பேசி முடிவெடுப்போம். தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே திருவண்ணாமலை உள்ளிட்டவற்றிற்கு போயிருக்கிறோம்.
இங்கு எங்கள் கைப்பட தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது. ஏற்பாடுகள் சிறப்பானதாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் யாரும் வந்து தகராறு செய்யவில்லை. அவர்கள் எல்லோரும் சகோதரர்கள். இதை அரசியலாக்கி சர்ச்சையாக்குகிறார்கள். மற்றபடி எல்லோரும் நண்பர்கள், எல்லோரும் சகோதரர்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.