November 29, 2026

Seithi Saral

Tamil News Channel

முருகப்பெருமான் வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார்: அமித்ஷா பதிவு

1 min read

Lord Murugan destroys evil forces with his victorious spear (Vetrivel): Amit Shah’s post

28/11/2026
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவ.24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது. மலை பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக போலீஸார் விலகிக் கொண்டு மத்திய ரிசர்வ் போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டபோது உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவினர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்ட சில நிமிடங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் “முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும” என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *