மாநில அதிகாரம் பாதிக்கப்பட்டதற்கு தவெக அரசே முழுப் பொறுப்பேற்பு; அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
TVK government bears full responsibility for the erosion of state authority; Annamalai’s accusation
28/11/2026
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநிலத்தின் அதிகாரம் பாதிக்கப்பட்டதற்கு, தவெக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் நிகழ்வில், உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவைக்கூட முறையாகச் செயல்படுத்தத் தவறிய தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த கவலையளிக்கிறது. இதன் விளைவாக மாநிலத்தின் அதிகாரம் பாதிக்கப்பட்டு, மத்தியப் பாதுகாப்புப் படைகள் தலையிடும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலுக்கு தமிழக தவெக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
முருகப் பெருமானின் பக்தர்களுக்கு நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதேநேரத்தில், இந்த விவகாரம் இரு சமூக மக்களிடையே பதற்றத்தையும் மோதலையும் உருவாக்குவதற்கு யாரும் இடமளிக்கக் கூடாது.
தீபம் ஏற்றும் நிகழ்வு நிறைவடைந்ததும் அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும். முஸ்லிம் மக்களும், ஹிந்து பக்தர்களும் அவரவர் வழிபாட்டு உரிமைகளை அமைதியாகத் தொடரட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் பேச்சுகளையும் செயல்களையும் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.