முருக பக்தர்களுக்காக தோரணமலையில் தீப விழிபாடு
1 min read
Deepa worship at Thoranamalai for devotees of Lord Murugan
29.11.2026
தென்காசி -கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் உலக வாழ் முருக பக்தர்களின் குடும்ப மேன்மைக்காகவும், மன அமைதிக்காகவும்,நாட்டிலுள்ள கிராமப்புற மாணவிகள் படிப்பில் சிறந்து விளங்கி நல்வாழ்வு பெறவும் இன்று (ஞாயிறு) காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
இதையொட்டி கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான அகல்விளக்கு தீபமானது கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் மற்றும் மாணவ மாணவிகளால் ஏற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு விநாயகர் கோவில் பின்புறம் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் ஸ்ரீ விருட்ச ராஜ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் நடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முருக பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு உண்டான நட்சத்திர மரத்தில் மலர் தூவி வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து 27 ராசி நட்சத்திர மரங்களுக்கு பூஜை நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும், தோரணமலை முருகனின் அபிஷேக நீர் பிரசாதமாக வழங்கப்பட்டது. காலை மற்றும் மதியம் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.