November 29, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் மின்சார ரிக்ஷா சார்ஜிங் மைத்தில் தீ; 4 டிரைவர்கள் பலி

1 min read

Fire at e-rickshaw charging point in Delhi; 4 drivers killed

29.11.2026
நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பின் தரைத் தளத்தில் இருந்த மின்சார ரிக்ஷா சார்ஜிங் மையத்தில் இன்று (நவ.,29) அதிகாலை தீப்பற்றி, ரிக்ஷா ஓட்டும் நான்கு டிரைவர்கள் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கிழக்கு டெல்லி விஸ்வாஸ் நகரில், நான்கு மாடி கட்டடத்தின் தரைத்தளத்தில், மின்சார ரிக்ஷா சார்ஜிங் மையம் செயல்படுகிறது. அதிகாலை, 4:20 மணிக்கு, சார்ஜ் செய்வதற்காகப் பொருத்தப்பட்டிருந்த மின்சார விநியோக பலகைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. வேகமாக பரவிய தீ, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நான்கு மின்சார ரிக்ஷாக்களும் பரவி அவை முற்றிலும் எரிந்து சாம்பலாகின. அந்தப் பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது. மேல் தளங்களுக்கும் மளமளவென தீ பரவியது.

தகவல் அறிந்து, பர்ஷ் பஜார் போலீசார் மற்றும் நான்கு வண்டிகளில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் மீட்பு வாகனங்களும் கொண்டு வரப்பட்டன.

முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த, மின்சார ரிக்ஷா ஓட்டும் ஆறு தொழிலாளர்கள் கரும்புகை மண்டலத்தில் சிக்கி மயங்கினர். தீயணைப்பு படையினர் ஆறு பேரையும் மீட்டு, ஹெட்கேவர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், நான்கு பேர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். மற்ற இருவருக்கு முதலுதவி செய்து, குருதேவ் பஹதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்று இருவரில் ஒருவரின் பெயர் ராம்வீர்,50, என்பது தெரிய வந்துள்ளது. மற்ற ஐந்து பேரை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
கட்டடத்தின் தரைத்தளம் மின்சார -ரிக்ஷா சார்ஜிங் நிலையமாக பயன்படுத்தப்பட்டதும், முதல் தளத்தில் மின்சார ரிக்ஷா டிரைவர்கள் தங்கியிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்ற தளங்களில் குடும்பங்கள் வசிக்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *