June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நடிகை சரண்யாவின் தந்தை மரணம்


Actress Saranya’s father dies

24-8-2020

நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும் டைரக்டருமான பாஸ்கர் ராஜ் மரணம் அடைந்தார்.

நடிகை சரண்யாவின் தந்தை

கமலஹாசனுடன் நாயகன் படத்தில் ஜோடி சேர்ந்து சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் சரண்யா பொன்வண்ணன். இவர் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது பல படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.

இவரது தந்தை ஆண்டனி பாஸ்கர் ராஜ் மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக விளங்கினார். மலையாளத்தில் 65 படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் துள்ளி ஓடும் புள்ளி மான் மற்றும் கை நிறைய காசு ஆகிய இரண்டு படங்களை டைரக்ட்டு செய்துள்ளார்.

மரணம்

ஆண்டனி பாஸ்கர் ராஜ் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது மகள் சரண்யா பொன்வண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 95.
அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.