June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு

Commercial cylinder prices drop

1.4.2025
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாத தொடக்கம் என்பதால் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,959.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.