Metro train in Chennai will run at 7 am
5-9-2020
சென்னையில் வருகிற 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் காலை 7 மணிக்கே ஓடத் தொடங்கும் என்று அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரெயில்
கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி தற்போது மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 7-ந் தேதி முதல் மாவட்டங்களை இணைக்கும் பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் 6-ந் தேதி இரவே ஓடத் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல் மெட்ரோ ரெயிலும் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்படும் என்றும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
7 மணிக்கே
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் சேவை காலை 8 மணிக்கு பதில் 7 மணிக்கே தொடங்கும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். தொழில்துறையினரின் கோரிக்கை ஏற்று மெட்ரோ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
கியூ.ஆர். வழிமுறையில் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் மெட்ரோ ரெயில் சேவைக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மெட்ரோ ரெயிலுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் அவர் தெளிவுபடுத்தினார்.