The Tenkasi Collector provided welfare assistance on behalf of the Muslim-Christian Women’s Aid Association
15/2/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் 245 பயனாளிகளுக்கு ரூ.22.35 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர். வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (15.02.2026) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ராணிஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.தி.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்வத சங்கம் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சமுதாயத்திற்கு பெண்கள் முதுகெலும்பு போன்றவர்கள். பெண்கள் முன்னேறினால் தான் சமுதாயம் முன்னேறும். சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை ஊக்குவித்து அவர்களுக்கு நிரந்தரமான தொழில், வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸிதவ பெண்கள் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமூக சிந்தனையோடு சாதி. மத வேறுபாடு இன்றி அனைவரும் ஏழைகள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும், இன்றைய தினம் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம்
119 பயனாளிகளுக்கு ரூ.10.31,200/- மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், 14 நபர்களுக்கு ரூ.83.300/- மதிப்பிலான மாவு அரைக்கும் இயந்திரங்களும், 18 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.1,80,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 88 பயனாளிகளுக்கு சிறு தொழில் உதவித்தொகையாக தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.8,80,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் ஆக மொத்தம் 239 பயனாளிகளுக்கு ரூ.21,74,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம் 06 பயனாளிகளுக்கு சிறு தொழில் உதவித்தொகையாக தலா ரூ.10.000 வீதம் மொத்தம் ரூ60,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 245 பயனாளிகளுக்கு 1.22.34.500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன். வடகரை பேரூராட்சி தலைவர் திரு.ஷேக் தாவூது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவவர் முத்துராமலிங்கம், முகம்மது சலீம், முகம்மது இஸ்மாயில், தென்காசி மீரான் மருத்துவமனை முதன்மை டாக்டர்.அப்துல் அஜிஸ், பக்கீர் மைதீன், புகாரி மீரா சாகிப், சந்திரா மற்றும் முஸ்லிம், கிறிஸ்துவ சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.