May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

மாஸ்டர் படக்காட்சி லீக் – மாணவியாக நடிக்கும் மாளவிகா மோகனன்

1 min read
Malavika Mohanan as a Student in master film

26.2.2020

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இந்தப் படத்துக்கு இப்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன.

தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மாளவிகா மோகனனுக்கு முதல்படமே சூப்பர் ஸ்டாருடன், இரண்டாவது படம் விஜய்யுடன் கிடைத்ததால் மற்ற நடிகைகள் இவர் மீது பொறாமையில் உள்ளனர். அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடியாகவும் அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

லீக்கான படக்காட்சி

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்கும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் மாளவிகா கல்லூரி மாணவியாக நடிக்கும் காட்சியின் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழுவினர் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதித்தும் இந்த மாதிரி புகைப்படங்கள் வெளியாவது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதே போல் தான் மாஸ்டர் பட ஆரம்பத்தில் தளபதி விஜய்யின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.