May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே கடனாநதி அணையில் மூழ்கி மாணவர் பரிதாப சாவு

1 min read

Student death in Kadana Dam near Kadayam

2/3/2020

கடையம் அருகே நண்பரின் பிறந்தநாளை கொண்டாட கடனா நதி அணைக்கு சென்றபோது பாலிடெக்னிக் மாணவர் அணையில் மூழ்கி பரிதாபமான இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மாணவர்

கடையம் அருகே வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மூத்த மகன் பலா. இவருக்கு தவிர ஒரு தம்பி, தங்கை உள்ளனர்.

ராஜன் மின்சார வாரியத்தில் தினக்கூலி ஊழியராக வேலைபார்த்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்து போனார். ராஜனின் மனைவி சுந்தரிமின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் பாலா மாதாபுரம் அருகே கானாவூரில் உள்ள தாத்தா காசி மணி (சந்தரியின் தந்தை) வீட்டில் வளர்ந்து வந்தார். பாவூர்சத்திரத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பாடப்பிரிவு எடுத்து இறுதி ஆண்டு படித்தார். இவருக்கு கோவையில் உள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் வேலையில் சேர இருந்தார்.

பரிதாப சாவு

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பர்களுடன் கடானா நதி அணைக்கு சென்றுள்ளார். அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் பிறந்தநாளையொட்டி அவர்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
அவர்களில் சிலர் அணையில் குளித்ததாக தெரிகிறது. பாலா கடைசியான குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறி அணையின் மடையில் இருந்து தண்ணீருக்குள் குதித்திருக்கிறார். அதன்பின் அவர் வெளியே வரவில்லை. அணையில் இருந்த சகதிக்குள் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுபற்றிய தகவல் கிடைத்தும் தீயணைப்பு படையினர் வரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இருட்டி விட்டதால் மீட்கமுடியவில்லை. இன்று (திங்கட்கிழமை) மீட்கும் முயற்சி நடக்கிறது.

இதுபற்றிய தகவல் கிடைத்தும் உறவினர்களும் அந்த கிராம மக்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாலாவின் சித்தப்பா ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.