கொரோனாவை தடுக்க தவறிவிட்டதோ உலகம்… ஓரு சந்தேகம்
1 min read
The world has failed to stop Corona?
9/3/2020
சீனாவில் முளைத்த கொரோனா என்ற விஷம் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சீனா மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, ஈரான், இத்தாலி என 100 நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
இந்த நோய் சீனாவின் உகான் மகாணத்தில் பரவியபோது அங்கு இருக்கும் மற்ற நாட்டினர் தங்கள் நாட்டுக்கு எப்படியாவது போய்விட வேண்டும் என்று ஆதங்கப்பட்டனர். அதற்கு சீனா உகான் நகரத்தை விட்டு யாரையும் வெளியே வர அனுமதிக்கவில்லை. அதற்கு காரணம் அவர்களை அங்கேயே வைத்து சிகிச்சை அளித்தால்தான் அந்த நோய் மற்ற பகுதிக்கும் பரவாமல் இருக்கும் என்பதால். ஆனால் இதை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. காரணம் தங்கள் நாட்டு பிரஜைகள் அங்கு எப்படி இருக்கிறார்களோ என்ற அச்சம். அதோடு தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகம். அப்படி இந்தியா இரண்டு சிறப்பு விமானங்களை அனுப்பி அங்கிருந்த இந்தியர்களை இங்கே அழைத்து வந்தது.
மறுப்பு
அதன்பின் கொரோன வெகுவாக பரவியதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆரம்பத்திலேயே இந்த வெளிநாட்டில் இருந்து நபர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து இருந்தால் இந்த நோய் சீனாவை தவிர்த்து பரவி இருக்காதோ என்று தோன்றுகிறது.
இந்தியாவிலும் அதேபோன்று நடவடிக்கையை முதலிலேயே தீவிரமாக எடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்த நோய் ஒருவரை தாக்கி இருந்தால் 24 நாட்கள் வரை கூட வெளியே தெரியாம் இருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதனால்தான் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை மருத்துவக் குழுவினர் 24 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அதற்குள் சளி இரும்மல் வந்தால் டாக்டரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினர். அவர்கள் முகவரி, போன் நம்பர் போன்றவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டனர்.
24 நாட்கள் அவர்களை எச்சரிக்கையான இருக்கச் சொன்ற மருத்துவக் குழுவினர், அந்த 24 நாட்களும் தங்கள் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயிரகண்கானவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் இப்படி கண்காணிக்க முடியுமா என்று நினைக்கத் தோன்றும். ஏன் முடியாது. கல்லூரி போன்ற பரந்த இடத்தை ஒருக்கி ஒவ்வொருவருக்கும் தனி அறைகூட கொடுத்து கண்காணித்து இருக்கலாம். 24 நாட்களுக்கு பிறகு அவர்களை மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பி இருக்கலாம்.
இப்படி செய்தால் கொரோனா பரவாமல் தடுத்து இருக்கலாம்.
ஆனால் கொரோனா பரவுதல் பற்றிய போதுமான கண்டுபிடிப்புகள் அறியலாளர்களுக்கே தெரியாமல் இருந்திருக்கலாமோ?
கேரளாவில்…
கேரளத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இவா்களில் மூவா் இத்தாலிக்கு சென்று வந்தவா்களாவா்.
இவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த போது, மருத்துவப் பரிசோதனையில் இருந்து தப்பிக்க இத்தாலியில் இருந்து வந்ததை மருத்துவக் குழுவினரிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரளத்தில் கடந்த மாதம் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மூவரும் சிகிச்சை பின் வீடு திரும்பிவிட்டனா். அவா்கள், சீனாவின் வூஹானிலிருந்து கேரளம் திரும்பிய மருத்துவ படிப்பு மாணவா்கள்.
இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்தின் ரண்ணி பகுதியை சோ்ந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சனிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களாவா். இதுதொடா்பாக, கேரள சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா கூறியதாவது:
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 5 பேரில் ஒரு தம்பதி, அவா்களது 24 வயது மகன் ஆகியோா், இத்தாலியின் வெனிஸ் நகரிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் கேரளம் திரும்பியுள்ளனா். வெனிஸ் நகரிலிருந்து கத்தாரின் தோஹா நகருக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்ற அவா்கள், அங்குள்ள விமான நிலையத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரம் இருந்துள்ளனா். பின்னா், அங்கிருந்து கொச்சிக்கு மாா்ச் 1-ந் தேதி விமானத்தில் வந்தனா்.
எனினும், தாங்கள் இத்தாலியிலிருந்து வந்ததை அதிகாரிகளிடம் அவா்கள் மறைத்துவிட்டனா். இதன் மூலம் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனையை தவிா்த்துவிட்டனா். அவா்களது இந்த நடவடிக்கை குற்றச் செயலுக்கு நிகரானதாகும்.
இந்த நிலையில், அவா்களது உறவினா்கள் இருவா் கரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளை அணுகியபோதுதான், மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தன. இதையடுத்து, 5 பேரும் பத்தினம்திட்டா பொது மருத்துவமனையின் தனிவாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இத்தாலிக்கு சென்று வந்த மூவரும் முதலில் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவா்களில் இருவா் அதிக வயதுடையவா்கள் என்பதால், அவா்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளனா். தற்போது அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது.
ஈரான், இத்தாலி, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து கேரளத்துக்கு திரும்பிய அனைவரும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கே.கே.ஷைலஜா.
