உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 65% வரை குறைய வாய்ப்பு
1 min read31.3.2020
கொரோனோ தாக்கத்தால் மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஒத்திவைத்துள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்கல்விக்காக இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை கொரோனா தாக்கத்தால் வெகுவாக குறையும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் ஏப்ரல் மாதம் கல்லூரிகளில் சேர இருந்த மாணவர்கள் 4 லட்சம் முதல் 15 லட்சம் செலவு வரை செலவு செய்து தற்போது உயர்கல்வியில் சேர முடியாத நிலையில் உள்ளது.
பொதுவாகவே நம்நாட்டில் இருந்து வெளிநாடு சென்று உயர்கல்வி பயிலும் ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது மேலாண்மை, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் உயர்கல்வி பயில நம் நாட்டில் இருந்து லண்டன், ப்ரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக செல்கின்றனர்.
கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 50சதவிகிதத்திற்கும் மேல் மேல் குறையும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் IELTS எனப்படும் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் அந்த வகையில் வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அதிகளவு மாணவர் சேர்க்கையை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளும்.
தற்போது கொரோனோ நோய் தாக்கத்தால் நுழைவுத்தேர்வு உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை .
ஏப்ரல் மாதம் வெளிநாட்டில் உயர்கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் வகுப்புகள் எடுப்பதாக கூறினாலும் அங்குள்ள கல்வி முறை ,மொழியை புரிந்து கொள்வது போன்றவை நேரிடையாக வகுப்பில் இருந்து பாடங்களை கற்பது போல வராது என்பதால் ஆன்லைன் முறையில் பாடங்களை அறிந்து கொள்ள அவை எந்த அளவு உதவும் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் கொரோனா தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பினாலும் உலகின் பல பகுதிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்கள் குவியும் என்பதால் மாணவர்களுக்கு இடம் கிடைப்பதிலும் கடுமையான சிக்கல்கள் ஏற்ப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உயர்கல்வி சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.