தமிழர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் என்ன?
1 min read31.3.2020
மேலை நாட்டின் கலாச்சார கவர்ச்சியில் என்று விழுந்தானோ அன்றே தமிழனின் அனைத்தும் காணாமல் போயிற்று, அது எப்படிங்க அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?.. இதோ வருகிறேன்…
நம் வீட்டில் வளர்த்த நாட்டு கோழியை நல்லெண்ணை ஊற்றி சமைத்து உண்ட நம் பழைய தமிழன், ஊர் திருவிழாவில் மாப்பிள்ளை குண்டு என்ற கல்லை தூக்கி பாருங்கள் என் பலத்தை என்று திமிராக நின்றான். ஆனால் இன்றைய தமிழன் செயற்கையாக வளர்க்கும் பிராய்லர் கோழியை தின்று நோஞ்சானாக சுற்றுகிறான்…
காலையில் சுக்கு, மிளகு, திப்பிலியை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது கருப்பட்டியை கலந்து அருந்திய பழைய தமிழன் புத்துணர்ச்சியோடு திகழ்ந்தான். ஆனால் இன்று கண்ட கண்ட தூளையும், கெமிக்கல் கலந்த வெள்ளை சர்க்கரையும் கலந்து குடித்த இன்றைய தமிழன் நீரிழிவு நோயை வாங்கி சொங்கி போனான்.
இப்படி சொல்லக்கூடிய விஷயங்கள் ஏராளம், எளிமையாக சொல்லனும்னா நம்ம தாத்தா, பாட்டி 10 குழந்தைகளை மிக சிரமம் இல்லாமல் பெத்தெடுத்தார்கள். ஆனால் இன்றோ ஒத்த குழந்தையை பெக்க கருத்தரிப்பு மையத்திற்கு ஓடுகிறோம்… காரணம் என்ன …? நம் முன்னோர்கள் உணவே மருந்து என ஆக சிறந்த உணவு முறையை நமக்காக விட்டுச் சென்றனர், கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு இப்படி எண்ணற்றவைகளை நம் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி கூடும், உடல் வலிமை பெறும் என்றனர். ஆனால் நாம் என்ன செய்தோம் அனைத்தையும் செயற்கையாக பயன்படுத்தினோம்.
குறிப்பாக கடலை எண்ணெய்க்கு பதிலாக சன் பிளவர் ஆயில்னு குருடாயில எப்ப பயன்படுத்தினோமோ அப்பவே கதை முடிஞ்சி போச்சு… இதற்கு காரணம்?
நேரம் இல்லை, கவுரவ குறைச்சல் என நீங்கள் நினைத்தது தான், உணவில் என்ன கவுரவ குறைச்சல் வேண்டி கிடக்கு, நம் திருமணம் மட்டும் பாரம்பரியம் மாறாமல் நடக்கனும். ஆனால் உணவில் மட்டும் பாரம்பரியம் மாறலாம்… கடலை மிட்டாய், எள்ளுருண்டையில் உள்ள சக்தி எதிலாவது உண்டா என நீங்களே ஆய்வு செய்து பாருங்கள்.
இன்று கொரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மருத்துவர் என்ன சொல்கிறார்கள் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவை உண்ண வேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள் பன்னெடுங்காலமாக வழக்கத்தில் கொண்டு வந்தனர். நாம் அதை மறந்தோம். இன்று மரண வாயில் நிற்கிறோம், சிந்தியுங்கள் மக்களே…
-மது