May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இரவில் சாப்பிட்டபின் 2 மணி நேரம் கழித்து தான் தூங்கணும்…

1 min read
2 hours after eating and going to bed

நைட் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழிச்சு தூங்கப் போங்க.
அப்படியே தூங்குனா இதயத்துக்கு நல்லது இல்லை…
நாம் அம்மா வயிற்றில் கருவாக வளரும்போது முதலில் உருவாவது இதயந்தான். நாம்ப செத்த பிறகு கடைசியா சாகறதும் இதயந்தான். நம் வாழ்நாள்ல எத்தன முறை துடிக்கணும்ன்னு ஏற்கெனவே அதன் டி என் ஏ யில் பதியப்பட்டிருக்கும்.
அதற்குமேல் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்.
நாம் எந்த அளவுக்கு கோபப்படாம டென்சன் ஆகாம இருக்கமோ அந்த அளவுக்கு இதயத் துடிப்பின் இடை வெளி அதிகரிக்கும். ஒவ்வொரு துடிப்புக்கும் இடைவெளி அதிகரிக்கும்போது நம் ஆயுள் கூடிக்கொண்டே இருக்குனு அர்த்தம். துடிப்பு எகிற எகிற ஆயுள் குறைஞ்சிட்டே போகும்.

அதனாலதான் சித்தர்கள் மூச்சை தம் புடுச்சு இதயத்துடிப்பை கண்ட்ரோல் பண்ணி 120 வருட மனித வாழ்வை 2000 வருடமாக மாற்றிக் கொண்டார்கள்
ஆச்சரியமாக இருக்கிறதா?…
ஆம் நாம் 120 வருடம் இளைஞர்களாவே இருப்போம்.
அப்றம்தான் aged proces start ஆகுது. இது உண்மைதான்.
அதுக்கு உணவு மனம் எண்ணங்கள் இதெல்லாம் சரியா இருக்கணும். அது எங்க நம்மிடம் இருக்கு…

இரவில் மற்ற உறுப்புகள் முழு ஓய்வில் இருக்கும். இதயம் சிறிது ஓய்வில் இருக்கும். இத்தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் உண்மை.
எப்படினா… உறங்கும்போது ஒரு துடிப்புக்கும் இன்னொரு துடிப்புக்கும் உள்ள கால அளவு அதிகப்படும்.
அதுதான் நாம் இதயத்துக்குக் கொடுக்கும் ஓய்வு. நாம் மூக்கு முட்ட சாப்பிட்டு படுத்தோம் என்றால் செரிக்கறதுக்காக ரத்தத்தை பம்ப் பன்னி இதயம் டயர்டு ஆகிடும் . பகல்னா நம் இயக்கங்களினால் சீக்கிரம் செரிச்சிடும்.

நாம் அப்படியே படுத்து விடுவதால் தூங்கும்போது முழு ஆற்றலையும் இதயமே குடுக்க வேண்டியதாயிடுது.
அதுவும் இல்லாம அதோட சேர்ந்து வயிறு, கல்லீரல், இரைப்பை, மண்ணீரல், சிறு குடல் எல்லாத்தையும் ஓய்வு குடுக்காம வேலை வாங்கிடறோம். அப்ப அதுங்களும் சீக்கிரம் தேய்ஞ்சிடும்.

அந்த மாதிரி சீரணமாகிற உணவு நல்லாவும் சீரணமாகாது.
நல்ல சத்துக்களாவும் மாற்றப்படாது. கெட்ட கொழுப்பு, கெட்ட சர்க்கரை இப்படித்தான் மாறும். அதுவும் இல்லாம பாதிக்குமேல கழிவாக அப்படியே வெளியேறி மலக்குடலை வேலை வாங்கி அதன் ஆயுளையும் கெடுத்து விடும். சிலர் மதியம் சாப்பிட்டு அப்படியே தூங்குவாங்க. அதுவும் இதே கதைதான்.

அதனால் இராத்திரி  அளவா சாப்பிட்டு அது சீரணமான பிறகு தூங்கப் போங்க. 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.