விரலில் வரும் வலிகளும் அதன் நோய்களும்
1 min read
SONY DSC
விரலில் வரும் வலிகளும் அதன் நோய்களும்
எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின்றது. இதன் ஆரம்ப கட்டங்களில் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கின்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். முதலில் கைகளை எடுத்துக் கொள்வோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களின் மூலம் ஆறு வகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டுபிடித்து விடலாம்.
இதனால்தான் இந்த மருத்துவத்தில் நோய் கண்டறிவதில் பிழை ஏற்படுவதில்லை. நோய் கண்டறிய இன்னும் சில வழிகளும் இருக்கின்றது. அவைகளில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை .
கை பெருவிரல் (THUMP FINGER)
கை பெருவிரல் வெளிப் பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமானால் அல்லது இதற்கு இடை இடையே வலியோ மரமரப்போ இருக்குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்
ஆட்காட்டி விரல் (INDEX FINGER)
ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப் பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.
நடு விரல் (MIDDLE FINGER)
நடு விரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்லது இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த விரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும்.
இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (PERICARDIUM) பாதிப்பை அறிவுறுத்தும் அறிகுறிகளாகும்.
மோதிர விரல் (RING FINGER)
உடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறியலாம்.
இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின்புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின்றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.
சுண்டு விரல் (SMALL FINGER)
சுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம்பித்து அது உள்ளங்கை பக்கமாக வந்து மணிக்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதியாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகின்றது.
சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங் கை கீழாக சென்று தோள்பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறு குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.
கவனம்: சுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இருப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
இதயத்தில் முதலில் பிரச்சினை வரும் போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறிகுறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.