June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவாடை, சட்டையில் ரசிகர்களை உசுப்பேற்றிய சரண்யா

1 min read
Saranya exudes fans in skirt and shirt

16.4.2020

தமிழில் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களை விட சீரியலில் நடிக்கும் ஹீரோயின்கள் தற்போது பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோரை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் சரண்யா.

முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், பிறகு இந்த சீரியல் மூலம் பிரபலமானார். குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் முழுக்க முழுக்க புடவை அணிந்து இளசுகளை கவர்ந்தவர்.

அதேபோல் தற்போது சன் டிவியில் ரன் என்ற சீரியலில் மாடர்ன் உடையணிந்து கலக்கி வருகிறார். சரண்யாவை பொறுத்தவரை சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். கிடைக்கும் சிறு நேரத்தில் கூட தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார்.

விடுமுறை நாட்களில் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என பாவாடை சட்டையும் பட்டையைக்கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் நம்ம சரண்யா.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *