May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

காலம்போன வயசுல கல்யாணத்துக்கு ஆசைப்படும் நடிகை

1 min read
Actress who aspires to the age of marriage

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அந்த பிரபல நடிகை. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவது ஒன்றும் சாதாரண விஷயமில்லை.

அந்த விஷயத்தில் அம்மணி கெட்டிக்காரி தான். ஆனால் கல்யாண விஷயத்தில் தான் கொஞ்சம் கோக்குமாக்கு வேலைகள் செய்கிறாராம். ஏற்கனவே பல நடிகர்களுடன் அம்மணிக்கு தொடர்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுத்தனர்.

அதுமட்டுமல்லாமல் அம்மணியின் குளியல் வீடியோ ஒன்று வெளியாகி இன்டர்நெட் அதிகம் இல்லாத காலத்திலேயே காட்டுத்தீ போல் வைரலாகி பல இளைஞர்களை காசு கொடுத்து நெட் சென்டர் சென்று பார்க்க வைத்தவர்.

பல விஷயத்தில் அந்த நடிகையின் பெயர் டேமேஜ் ஆகி கொண்டிருந்த நிலையில் பெற்றோர்கள் அந்த நடிகைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தார்களாம். நிச்சயம் வரை சென்ற அந்த கல்யாணம் கை கூட வில்லை.

அதன்பிறகு வாழ்வே மாயம் என்ற சோகத்தில் வாராவாரம் சரக்கடிக்க கிளம்பி விடுவாராம் அம்மணி. அதன்பிறகு உயரமான ஒரு நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார் அந்த நாயகி. இப்படியே போனால் பல கிசுகிசுக்களை உருவாக்கி நம்ம சோலியை முடித்து விடுவார்கள் என உஷாரான அம்மணி பெற்றோர்களிடம் மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி விட்டாராம். அதுவும் கோடீஸ்வர மாப்பிளை தான் வேணும் என ஒற்றை காலில் நிற்கிறாராம்.

ஏற்கனவே வயது ஏகப்பட்டது ஆகிவிட்ட நிலையில் இதற்கு மேல் கோடீஸ்வர மாப்பிள்ளை எங்கே போய் தேடுவது என தலையில் அடித்துக் கொள்கிறார்களாம் அவரது பெற்றோர்கள். அப்படியே கிடைத்தாலும் செகனண்ட் தான் கிடைக்கும் என புலம்பித் தள்ளுகிறார்களாம்.

அம்மணியின் நெருங்கிய வட்டாரங்களோ, இருந்ததுதான் இருந்தீங்க, இன்னும் கொஞ்ச நாள் இப்படியே இருந்துவிட்டால் நேரடியாக அறுபதாம் கல்யாணம் பண்ணி விடலாமே என அநியாயத்துக்கு நடிகையை கிண்டல் செய்கிறார்களாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.