May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வது சரியா? தவறா?

1 min read


Is it okay to go home from Chennai? Wrong?

3-5-2020

கொரோனா அதிகமாக பரவி வரும் இந்த நேரத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வது சரியா? தவறா? என்ற  விவாதம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சென்னையில் கொரோனா

சீனாவில் உருவான கொரோனா இந்தியாவிலும் பரவத் தொடங்கிய உடன் அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் இந்தியா முமுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்துதான் மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது.

தமிழக அரசு தடை உத்தரவு பற்றிய அறிவிப்பை பிறப்பித்தவுடன் பலர் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் ஆனார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமானோர் புறப்பட்டனர். இதனால் பஸ்களில் கூட்டம் நிரப்பி வழிந்தது. பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மீண்டும் தற்காலிகமாக இயக்கப்படும் சூழ்நிலை உருவானது.

அப்போது கொரோனா நேரத்தில் இப்படி கூட்டம் கூட்டமாக பயணம் செய்கிறார்களே என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் கொண்டதும் உண்டு. ஆனால் அப்போது கொரோனா தொற்று இவ்வளவு பரவவில்லை.

கோயம்பேடு மார்க்கெட்

அதன்பின்னர்தான் கொரோனா தொற்று சென்னையில் பரவியது. கடந்த ஒரு வாரமாக சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், பொதுமக்களுக்கு கோரோனா பரவியது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.  காரணம் அந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான வியாபாரிகள் சென்று வருகிறார்கள். அவர்கள் மூலம் இந்த கொரோனா இன்னும் பல இடங்களுக்கு பரவி இருக்குமோ என்ற பயம்தான்.

கொரேனா இப்படி வேகமாக பரவி வருவதால் சென்னையில் வசிக்கும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். இதற்காக பலர் முறைபடி அனுமதி பெற்று செல்கிறார்கள். ஆனால் பலர் அனுமதி இன்றி செல்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் காய்கறி லாரிகளில் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சரியா-தவறா?

இப்படி செல்வது தவறு என்று சிலர் சொல்கிறார்கள். இதனால் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு சில மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறும் நிலை உருவாகி விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இதனால் ங்கள் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்குமோ என்று அம்மாவட்ட மக்கள் பயப்படுகிறார்கள்.

அதேநேரம் சென்னையில் உள்ள நெருக்கடி இன்னும் பலரை  கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கலாம் என்றும் எனவே சென்னை நகரில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

தற்போது சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்களை கொரோனா பரிசோதனை செய்கிறார்கள். அதில் யாருக்கேனும் கொரோனா இருந்தால் அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் 2 வார  காலம் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதில் எதுவானாலும் பரவாயில்லை என்கிறார்கள்.

 சென்னையைத் தவிர மற்ற மாவட்ட ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகம் இருக்காது. எனவே சென்னையில் இருந்து சென்றவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிப்பது எளிது. காரணம் மற்ற மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சென்னை ஆஸ்பத்திரிகளைப்போல் கூட்டம் இருக்காது. அதேநேரம் அவர்கள் சென்னையிலேயே இருந்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு வந்தால் அவர்கள் சென்னை ஆஸ்பத்திரிகளில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்க்கப்படுவார்கள்.

மேலும் சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்று அவர்கள் தனிமை படுத்தப்படுவதால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது-‘

அந்த வகையில் சென்னையில் இருந்த மற்ற ஊர்களுக்கு செல்வது நல்லது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அனுமதி தேவை

எனவே விருப்பமானவர்களை சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஒரு பஸ்சில் குறைந்த அளவு பயணிகளே செல்ல வேண்டும் என்பதால் சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். அப்படி சொந்த ஊருக்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொரோனா பரவலை தடுக்கலாம்.இப்படி செய்வதால் சென்னையில் நெருக்கடி கொஞ்சமாவது குறையும். அதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து பலர் தப்பிக்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.