சினிமா தயாரிப்பாளர் ரகுநாதன் மரணம்; கமல்ஹாசனை கதாநாயகனாக அறிமுகம் செய்தவர்
1 min read
Death of filmmaker Raghunathan; Who introduced Kamal Haasan as the hero
22-5-2020
தமிழ் சினிமா தயாரிப்பாளர் ரகுநாதன் மரணம் அடைந்தார். இவர் நடிகர் கமல்ஹாசனை கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் ஆவார்.
ரகுநாதன்
பட்டாம்பூச்சி, மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன் உள்பட பல படங்களை தயாரித்தவர் ரசுநாதன்.
நடிகர் கமல்ஹாசன் குழந்தை பருவத்தில் இருந்து நடித்து வந்தனர். அவர் வாலிபன் ஆன பிறகும் கதாநாயகனாக நடிக்கவில்லை.. இணை நாயகனாகத்தான் நடித்து வந்தார். அவரை தயாரிப்பாளர் ரகுநாதன்தான் தனது பட்டாம்பூச்சி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.
ரகுநாதன் தற்போது மரகதக்காடு படம் வெளியாக இருக்கிறது.
மரணம்
இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு உடல்நலக் குறைபாடு காரணமாக ரகுநாதன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.
அவரது மகன் நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். சித்ரா என்ற மகளும் இருக்கிறார்.