August 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியா கண்டுபிடித்த கொரோனா 4 தடுப்பூசி மருந்துகள் பரிசோதனை

1 min read

India’s coronavirus 4 vaccines tested

25-5-2020

கொரோனா தடுப்பூசிக்குஇந்தியா 4 மருந்துகள் கண்டு பிடித்துள்ளது. அவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் ஆகிய இருவரும் சமூக வலைதளத்தில் கலந்துரையாடல் நடத்தினர்.
அதில், ஹர்ஷவர்தன் கூறியதாக கூறியதாவது.-

தடுப்பூசி மருந்து

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் சுமார் 100 தடுப்பூசி மருந்துகள் வெவ்வேறு கட்ட சோதனையில் இருக்கின்றன. இந்தியாவில் 14 தடுப்பூசி மருந்துகள் பரிந்துரைக்கு வந்துள்ளன. அதில் நான்கு தடுப்பூசி மருந்துகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டிவிடும்.

தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறை நீண்ட காலமானது என்பதால், கொரோனா வைரசுக்கு விரைவிலேயே தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது. எந்தவொரு தடுப்பூசியையும் உருவாக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகும். எனவே, தடுப்பூசி அல்லது சிகிச்சை பயன்பாட்டுக்கு வரும்வரை, சமூக விலகல், மாஸ்க் அணிவது, கை மற்றும் உடல் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். அதுவே நோய்க்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு. இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *