September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் விறகு கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை

1 min read

Worker murdered after being struck with a firewood log in Thoothukudi.

26.9.2026
தூத்துக்குடியில் விறகு கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார்

தூத்துக்குடி அய்யடைப்பு செங்குளம் வடக்குத் தெருவில் வசிப்பவர் சுப்பிரமணியன் இவரது மகன் ஆனந்த் வயது 50 கூலித் தொழிலாளியான
இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் உள்ளனர் இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் இதனால் மகளுடன் வசித்து வந்தார்

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள தங்கமணி என்பவருக்கு சொந்தமான விறகு கடை முன்பு நின்று கொண்டிருந்த டிராக்டரில் படுத்திருந்தாராம்

அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் இவரை சரமாரியாக விறகு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் ஆனந்த் பரிதாபமாக இறந்தார் பின்னர் அந்த ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் இது சம்பந்தமாக கொலை வழக்கு பதிவு செய்து இவரை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தனர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறா அல்லது குடும்பத் தகராறாஎன்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *