September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே டிராக்டர் மின்கம்பத்தில் மோதி விபத்து டிரைவர் பலி

1 min read

Driver dies after tractor hits electric pole near Tenkasi

26.9.2026
தென்காசி அருகே ஊர்மேலழகியான் பகுதியில் டிராக்டர் மின் கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் டிராக்டர் டிரைவர் பலியானார்.

தென்காசி மாவட்டம் ஊர்மேலழகியான் பெரிய குளத்தில் 25.09.2026 மாலை 4 மணிக்கு வண்டல் மண் டிராக்டரில் ஏற்றி இறக்கி விட்டு வரும் வழியில் மெயின் ரோட்டில் டிராக்டர் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதி ஸ்டிரிங் நெஞ்சில் அடித்து டிராக்டர் டிரைவர் நெஞ்சில் அடிபட்டு மயக்கம் அடைந்தார் .

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில் விபத்துக்குள்ளான டிராக்டரை ஓட்டி வந்து பலியான டிரைவர் வாசுதேவநல்லூர் தும்பமேடு
வேளாண் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 48) என்பது தெரிய வந்துள்ளது இது தொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *