சென்னையில் ஒரே நாளில் 616 பேருக்கு கொரோனா
1 min read616 coroners overnight in Chennai
30-5-2020
சென்னையில் இன்று ( சனிக்கிழமை) ஒரே நாளில் 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் இன்று 938 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 616 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,980 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைத் தவிர செங்கல்பட்டில் 94 பேருக்கும், சேலத்தில் 37 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கடலூரில் 5 பேருக்கும் கன்னியாகுமரியில் 4 பேக்கும், நாகப்பட்டினத்தில் 3 பேருக்கும்? கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும், கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
6 பேர் சாவு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் குரோனாவுக்கு 6 பேர் இறந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 160 பேர் இறந்துள்ளனர்.