சென்னை ராயபுரத்தில் 3,552 பேருக்கு கொரோனா
1 min read
3,552 Corona case in chenna Rayapuram
6-5-2020
சென்னை மாநகராட்சி பகுதியில் ராயபுரம் மண்டலத்தில் 3,552 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் குறைவாக ஆலந்தூர் மண்டலத்தில் 314 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா
தமிழகத்தில் சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் தினமும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது.
நேற்று மட்டும் (வெள்ளிக்கிழமை) 1,116 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19, 826 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) மட்டும் கொரோனாவுக்கு 12 பேர் இறந்துள்ளனர். அவர்கள் 12 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால். சென்னையில் மட்டும் இதுவரை 178 பேர் இறந்துள்ளனர்.
ராயபுரம்
சென்னை மாநகராட்சி பகுதியில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,552 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தண்டையார்ப்பேட்டை மண்டலத்தில் 2,470 பேருக்குமூ, தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,245 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் ,2,202 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையிலேயே ஆலந்தூர் மண்டலத்தில் தான் குறைந்த அளவு பாதிப்பு. அந்த மண்டலத்தில் 314 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது.
23 சிறுவர்கள்
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் 23 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து காப்பக வளாகத்தை தூய்மை செய்யும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. சிறுவர்களுக்கு சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளி்கப்பட்டு வருகிறது.
அபராதம்
ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியவர்களிடம் ரூ.10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது 5.48 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 50,579 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.