September 27, 2026

Seithi Saral

Tamil News Channel

அமேசானுக்கு ஆப்பு வைத்த பொன்மகள் வந்தாள்.. நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யா படத்தை கேட்டு டார்ச்சர்

1 min read
Amazon loses money due to ponmahal vandhaal- asking Surya to compensate

தமிழ் சினிமாவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களை பகைத்துக்கொண்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி அமேசான் ப்ரைமில் வெளியான படம்தான் பொன்மகள் வந்தாள்.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அமேசான் நிறுவனம் கடந்த மே 29-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால் படம் அமேசானில் வெளியாவதற்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸ் இல் வெளியானது.

அது மட்டும் இல்லாமல் வெறும் 4 கோடி பட்ஜெட் படத்தை அமேசானுக்கு 9 கோடிக்கு விற்று நல்ல லாபம் பார்த்தார் சூர்யா. ஆனால் படம் வாங்கிய விலைக்கு மேல் விளம்பரப்படுத்துவதில் பணத்தை அள்ளித் தெளித்தது அமேசான் நிறுவனம்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்படி அமேசான் நிறுவனத்திற்கு பெரிய அளவு லாபத்தை பொன்மகள் வந்தாள் படம் கொடுக்கவில்லை என்பதே தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் நாயகி ரேஞ்சுக்கு ஜோதிகாவை பில்டப் பண்ணி வெளியான பொன்மகள்வந்தாள் படம் அமேசானில் வராமலேயே இருந்திருக்கலாம் என கருதுகிறார்களாம் உயரதிகாரிகள்.

இதனால் எப்படியாவது சூரரைப்போற்று படத்தை கைப்பற்றி அமேசானில் வெளியிட்டு நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்களாம். அதன் முன்னோட்டமாக முதலில் சென்சார் சர்டிபிகேட் வாங்கியது சூரரைப்போற்று படக்குழு.

மேலும் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சூரரைப்போற்று படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அந்தப் படத்தையும் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் மூலம் தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையாகவே பொன்மகள்வந்தாள் படம் நஷ்டமா அல்லது சூர்யாவின் படத்தை வளைக்க கார்ப்பரேட் நிறுவனம் போட்ட திட்டம் என்பதை அவர்களே கூறினால் தான் உண்மை தெரியும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *