நடிகர் சூர்யா வீட்டில் சமையல் செய்கிறாரா?
1 min read
Actor Surya cooking at home?
10-6-2020
நடிகர் சூர்யா சமையல் செய்வது போன்ற படம் தற்போது வலைதளத்தில் பரவி வருகிறது.
நடிகர் சூர்யா
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சிவகுமாரின் மூத்த மகன். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப்படம் விரைவல் வெளிவர உள்ளது. அந்த படம் ஏர் டெக்கன் என்ற ஏர்லைன்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும்.
ராணுவத்தில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு பொது மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவும் விதத்தில் ஒரு மலிவு டிக்கெட் விமான நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை பற்றியது தான் சூரரைப் போற்று படம்.
இந்த படத்தில் சூர்யா தனது தோற்றத்தில் அதிக மாற்றங்கள் கொண்டுவந்து மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். எனவே இந்தப் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சூரரைப் போற்று சென்சார் முடிவு பெற்றது. அனைவரும் பார்க்கலாம் என யு சான்றிதழ் தான் சென்சார் போர்டு வழங்கியுள்ளது.
அருவா
கொரோனா ஊரடங்கு முடிந்து மீண்டும் சினிமா படங்களின் ஷூட்டிங் தொடங்கப்பட்டவுடன் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.
அது முடித்த பிறகு வெற்றி மாறனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். வாடிவாசல் என்று பெயரிட்டுள்ள இந்தப்படம் ஜல்லிக்கட்டு தொடர்பான கதையைக் கொண்டது.
மேலும் அடுத்த வருடம் சூர்யா 24 பட இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில்நடிக்கிறார்.
சமையல் செய்யும் சூர்யா
தற்போது கொரோன ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் தங்கள் படங்களை வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். நடிகைகள் பெரும்பாலும் தங்கள் வீட்டில் ஒர்க்கவுட், யோகா, சமையல் உள்ளிட்ட பல விஷயங்களை பதிவு செய்கிறார்கள்.
நடிகர் சிம்பு தனது வீட்டில் குடும்பத்தினர் அனைவருக்கும் சிக்கன் மட்டன் என விதவிதமாக சமைத்து கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ சில வாரங்கள் முன்பு வைரலாகி இருந்தது.
இந்த நிலையில் நேற்று நடிகர் சூர்யா சமைத்துக் கொண்டு இருப்பது போன்ற ஒரு போட்டோ இணையத்தில் பரவியது.
சூர்யாவும் குடும்பத்துக்கு சமைக்கிறார் போல என்று பலர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்கள்.
ஆனால் இந்த படத்திற்கான பின்னணி என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்த சமையல் செய்யும் போட்டோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சூர்யா சென்னை அடையாறில் சமையல் வகுப்பு ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான் அது. அப்போது வெளியான அந்த புகைப்படத்தில் சூர்யாவுடன் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஞானவேல் உடன் இருந்தார். ஆனால் தற்போது வைரலாகும் புகைப்படத்தில் சூர்யா மட்டுமே இருக்கிறார். அந்த புகைப் படத்தை யாரோ சிலர் மீண்டும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.