இன்ஸ்ராகிராமில் சுருதிஹாசனை பின் தொடருவோர் ஒரு கோடி தாண்டியது
1 min read
One crore followers to Zurichihassan on Instagram
10-6-2020
நடிகை சுருதிஹாசை இன்ஸ்ராகிராமில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தண்டியுள்ளது.
நடிகை சுருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் சுருதிஹாசன். இவர் 1986-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந் தேதி சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பை கல்லூரியில் உளவியலும் முடித்தார். அதன்பின் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கும் இசைக்கல்லூரியில் இசை கற்றார்.
சுருதிஹாசன் தனது 6 வயதில் முதல் பாடலை பாடினார். தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி… என்ற பாடலை பாடினார். அதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹேராம் (தமிழ், இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
ஏழாம் அறிவு
இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன்பின் சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார்.
2011-ம் ஆண்டு சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.
இவர் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து உள்ளார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார்
ஒரு கோடி பேர்
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்கிய சுஸ்ருதி ஹாசன், சமூக வலைத்தளத்தில் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறார்.
பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தன்னுடைய விதவிதமான படங்களை பதிவிட்டு வருகிறார். இதனால் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. தற்போது14 மில்லியனை தொட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.