பள்ளிக்குழந்தைகளுக்கு ஆன்-லைனில் பாடம் நடிகர் சூரி
1 min read
Suri on-line lesson for schoolchildren
12-6-2020
மதுரையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிப்பில் உச்சத்திற்கு சென்றாலும் தான் பிறந்த மதுரையை மறக்கவில்லை. அங்கு ஓட்டல் தொடங்கி உள்ளார்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் வித்தியாச முறையில் அதே நேரம் ஆக்கப்பூர்வமான வகையில் பொழுதை போக்கியுள்ளார்.
அவர் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் நகைச்சுவை நடிகர் சூரி பாடம் நடத்தினார். பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டும் விதமாக சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடினார். கல்வியின் முக்கியத்துவம், விடா முயற்சி ஆகியவை குறித்து நகைச்சுவையாக அவர் பேசிய போது, மாணவர்களிடம் சிரிப்பலையும், குறும்பு கேள்விகளும் எழுந்தது. கலகலப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வை, அதிகாரிகளும் கண்டு ரசித்தனர்.