June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

‘தைய தையா‘ பாடல் நாயகி குடியிருப்புக்கு கொரோனா சீல்

1 min read
Actress Malaikka residence sealed

12-6-2020

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் அதிகமாக பரவும் மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒரரு தெருவில் யாருக்கேனும் கொரோனா கண்டறியப்பட்டால் அந்த தெருவுக்கே சீல் வைத்து விடுகின்றனர். அதேபோல் ஒரு குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா வந்தாலும் அந்த குடியுருப்பை தனிமைப்படுத்தி சீல் வைத்து விடுகின்றனர்.

மலைக்கா

பிரபல இந்தி நடிகை மலைக்கா வீட்டுக்கு அருகில் வசிப்பவர் ஒருவருக்க கொரோனா தொற்று ஏற்பட்டது. நடிகை மலைக்கா மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உயிரே என்ற பெயரிலும் இந்தியில் தில்சா பெயரிலும் வெளியான படத்தில் ‘தைய தையா‘ என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர்.
மும்பையில் வசித்து வரும் இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவருக்குதான் கொரோனா ஏற்பட்டது.

இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் மலைக்கா வசித்த அடுக்கு மாடி குடியிருப்பையே தனிமைப்படுத்தி சீல் வைத்து விட்டனர். இதனால் மலைக்கா தவிப்பில் உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *