June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா

1 min read

Delhi helth minister sathyethira jain Influence for corona

18-6-2020

டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி மந்திரி

டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் என வந்தது. பின்னர் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சத்யேந்திர ஜெயின் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறைகளும், துணை முதல்வரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *