June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடியில் வங்கி அதிகாரி மரம் விழுந்து சாவு

1 min read

Bank officer death for tree fell

20-6-2020‘

புளியங்குடியில் வங்கி அதிகாரி ஒருவர் மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

வங்கி அதிகாரி

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தவர் ரோகித்பர்வீன் (வயது 27).
இவருக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. இவர் தன்னுடைய மனைவியுடன் தென்காசியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

மரம் விழுந்து சாவு

தென்காசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.
வரும்வழியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து அவர் மீது விழுந்தது.
இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் ஆன ஆறு மாத்த்தில் விபத்தில் வங்கி அதகாரி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படு்த்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *