August 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளராக இசக்கி சுப்பையா நியமனம்

1 min read

Isakki Subbiah appointed as the Tirunelveli East District Secretary of T. V. K.

9.8.2026
தவெக தலைவர் ஜோசப் விஜய் விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கழக மாவட்டங்களுடன் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட மாவட்டத்திற்கு பின்வரும் வகையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் (அம்பாசமுத்திரம் தொகுதி) மாவட்டக் கழகச் செயலாளராக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து மாவட்டக் கழக இணைச் செயலாளராக
இ.பால முருகன், பொருளாளராக . ராஜா மணிகண்டன்,துணைச் செயலாளர்களாக கே.ஜான்சி ராணி மற்றும் எஸ்.அன்பழகன்
செயற்குழு உறுப்பினர்களாக
எம்ஃவித்யா, கே.ராஜேஸ்வரி பி..ஆனந்தி, சி.அனிதா பி.வில்சன் துரை, டி.முரளி, கணபதி ராம சுப்ரமணியன்,
மைக்கேல் லிகோ,
ஏ.கார்த்திக், சதீஸ்குமார், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தவெக தலைவர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *