August 9, 2026

Seithi Saral

Tamil News Channel

சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை

1 min read

Sale of national flags at post offices ahead of Independence Day

9.8.2026
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.

இது பற்றி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது :-

இந்திய திருநாட்டின் 80 வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப் படப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

ஒரு தேசியக் கொடியின் விலை ரூபாய் 25 ஆகும். பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், வணிகர்களும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன் பெறும் வகையில் கிராமப்புற அஞ்சல் அலுவலங்கள் உட்பட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறும், கொடிகளுக்கான மொத்த தேவை ஏதும் இருப்பின் 04632 -221013 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் .

இவ்வாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *