June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை பெண் போலீசின் 11 மாத குழந்தைக்கு கொரோனா

1 min read

சென்னை ெபண் போலீசின் 11 மாத குழந்தைக்கு கொரோனா

21.6.2020

Corona, 11-month-old baby of Chennai woman police

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள செட்டியூருக்கு சென்னையில் இருந்து வந்த 28 வயதான பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது 69 வயது தந்தைக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து அவரை மீட்ட சுகாதாரத் துறையினர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே கடந்த 17ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் (18ம் தேதி) பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்திற்கு வந்த பெண் காவலர், தென்காசி மாவட்ட எல்லையான சிவகிரி செக்போஸ்டில், எவ்வித பரிசோதனையும் மேற்கொள்ளாமல் வந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சென்ற பாவூர்சத்திரம் சுகாதாரத்துறையினர் அவரது குடும்பத்தினரிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் பெண் காவலரின் 11 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *