இந்தியாவில் ஒரேநாளில் 14,821 பேருக்கு கொரோனா- தமிழகத்தை முந்தியது டெல்லி
1 min read
Corona tops 14,821 overnight in India- Delhi overtook Tamil Nadu
22-6-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,821 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பில் தமிழகத்தை டெல்லி முந்தியது.
கொரோனா
இந்தியாவில் பரவி வரும் கொரோனா நிலவரம் பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( திங்கட்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 14,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 282 ஆக உயர்ந்தது. இவர்களில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 387 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகிளல் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 37 ஆயிரத்து 196 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
445 பேர் சாவு
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று மட்டும் கொரோனாவுக்கு 445 பேர் இ,றந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கண்டவாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விவரம்
டெல்லி 2-வது இடம்
கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இருந்த தமிழகத்தை டெல்லி முந்தியது.தற்போது மராட்டியத்திற்கு அடுத்து டெல்லி வந்துஉள்ளது.
இந்தியா முழுவரும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அடைப்புக்குறிக்குள் இறந்தவர்களின் எண்ணிக்கையும் மாநிலம் வாரியா கீழே தரப்பட்டு உள்ளது.
மராட்டியம் – 1,32,075 (6,170)
டெல்லி – 59,746 (2,175)
தமிழ்நாடு -59,377 (757)
குஜராத்-27,260 (1,663)
உத்தரபிரதேசம்,-17,731 (550)
ராஜஸ்தான்-14,930 (349)
மேற்கு வங்காளம்- 13,945 (555)
மத்தியபிரதேசம்-11,903 (515)
அரியானா-10,635 (160)
கர்நாடகா-9,150 (137)
ஆந்திரா 8,999 (106)
தெலுங்கானா-7,802 (210)
பீகார்-7,612 (53)
காஷ்மீர்-5,956 (82)
அசாம்-5,388 (9)
ஒடிசா-5,160 (14)
பஞ்சாப் 4,074 (99)
கேரளா-3,172 (21)
உத்தரகாண்ட்-2,344 (27)
சத்தீஸ்கர்-2,275 (11)
ஜார்க்கண்ட்-2,073 (11)
திரிபுரா-1,221(1)
மணிப்பூர்-841 (0)
லடாக்-837(1)
கோவா-754 (0)
இமாச்சல பிரதேசம்-673 (8)
சண்டிகர்-406(6)
புதுச்சேரி-366 (8)
நாகலாந்து-211(0)
மிஜோரம்-141 (0)
அருணாச்சல பிரதேசம் – 135(0)