May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இரண்டு முறை ரஜினி அழைத்தும் ஜோடி சேர மறுத்த டிவி பிரபலம்

1 min read

25.6.2020

TV celebrity refuses to join Rajini twice

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நாயகனாக 40 வருடங்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்ததாக அவரது நடிப்பில் அண்ணாத்த படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

அப்பேர்பட்ட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கேட்டு நடிக்க முடியாது என்ற பிரபலத்தைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அதுவும் ஒருமுறையல்ல இரண்டு முறை இரண்டு படங்களில் கேட்டும் முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

90களில் பிறந்தவருக்கு சன் டிவியில் பெப்ஸி உமா நிகழ்ச்சியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தொலைக்காட்சியில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது பெப்ஸி உமா தான்.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குஷ்புவுக்கு அடுத்ததாக ரசிகர்கள் கோவில் கட்டியது இவருக்குத்தான். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் படு ஃபேமஸ்.

அப்பேர்பட்ட பெப்சி உமாவை ரஜினிகாந்த் முத்து படத்தில் நாயகியாக நடிக்க முதலில் கமிட் செய்ய சென்றாராம். ஆனால் பெப்சி உமா முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

எப்படியாவது இவரை நம்முடைய படத்தில் ஜோடியாக போட்டு விட வேண்டும் என நினைத்து மீண்டும் ஒரு படத்தில் வாய்ப்பு கொடுத்தாராம். சூப்பர் ஸ்டாருடன் போட்டி போட நாயகிகள் காத்துக் கொண்டிருந்த போது தானாக வந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்திலும் வாய்ப்பு கிடைத்து வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். அதற்கு காரணமாக அவர் சொன்னது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்பதால் படங்களில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இப்படி ஒரு பெண்ணா என அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார் பெப்சி உமா. சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு பேட்டி கொடுக்கையில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.