இந்தியாவில் ஒரே நாளில் 18,522 பேருக்கு கொரோனா; 418 பேர் சாவு
1 min read
All over India corona affected 18.522 person and death 418
30-6-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 418 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
18,522 பேருக்கு கொரோனா
இந்தியாவல் பரவி வரும் கொரோனா பற்றிய தகவலை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 18 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து, 66 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2 லட்சத்து, 15 ஆயிரத்து 125 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 34 ஆயிரத்து 822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
418 பேர் சாவு
இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 418 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) வரை 86 லட்சத்து 8 ஆயிரத்து 654 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் நேற்று மடடும் 2 லட்சத்து 10 ஆயிரத்து 292 பரிசோதனைகள் நடந்துள்ளது.
மாநிலம் வாரியாக…
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்
குள்) மாநிலம் வாரியாக வருமாறு-
மராட்டியம் 1, 69, 883 ( 7,610)
தமிழ்நாடு 86,224 (1,141)
டெல்லி 85,161 (2,680)
குஜராத் 31,938 (1,827)
உத்தரபிரதேசம் 22,828 ( 672)
மேற்கு வங்காளம் 17, 907 ( 653)
ராஜஸ்தான் 17,660 (405)
தெலுங்கானா 15,394 (253)
கர்நாடகம் 14,210 (226)
அரியானா 14,210 ( 232)
ஆந்திரா 13,891 (180)
மத்திய பிரதேசம் 13,370 ( 564)
பீகார் 9,640 (62)
அசாம் 7, 752 (11 )
காஷ்மீர் 7,237 ( 95)
ஒடிசா 6, 859 (23)
பஞ்சாப் 5,418 (133)
கேரளா 4,189 (22)
உத்தரகாண்ட் 2, 831 ( 39) .
சத்தீஸ்கர் 2,761 ( 13 )
ஜார்கண்ட் 2 ,426 (13 )
திரிபுரா 1, 380 ( 1 )
மணிப்பூர் 1,227 (0)
கோவா 1,198 ( 3)
புதுச்சேரி 619 ( 10 )