இந்தியாவுக்குள் 423 மீட்டர் தூரத்தை சீனா ஆக்கிரமித்தது; செயற்கை கோள் படம் வெளியீடு
1 min readChina occupied 423 meters within India; Release of satellite image
30-6-2020
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் 423 மீட்டர் தூரம் வரை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதனை செயற்கைக்கோள் படம் காட்டியுள்ளது.
சீனா இந்திய எல்லைப்பகுதியில் ஊடுருவி இந்திய பகுதியை ஆக்கிரமித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதனையடுத்து நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நம் வீரர்கள் பதிலடி கொடுத்ததில் 43 சீன வீரர்கள் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதை சீனா மறுத்துள்ளது. இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய பகுதியை ஆக்கிரமித்ததால் இந்த மோதல் ஏற்பட்டது.
1960ம் ஆண்டு முதல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை உரிமைகோரி வருகிறது. கடந்த 25ம் தேதி வரை எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து 423 மீட்டர் தூரம் வரையுள்ள இந்திய எல்லைக்குள் சீன படை ஊடுருவியுள்ளது.
இது தொடர்பாக என்.டி.டி.வி செயற்கை கோள் படங்களை வெளியிட்டு உள்ளது. அந்த படங்களில், இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் சீனாவின் 16 கூடாரங்கள், ஒரு பெரிய தங்குமிடம் அமைக்கப்பட்டிருப்பதையும் மற்றும் 14 வாகனங்களையும் காண முடிகிறது. இந்த செயற்கைக்கோள் படங்கள் மூலம் சீன படைகளின் ஊடுருவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.