April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

டிக் டாக், ஷேர் இட், பிரவுசர், யு.சி., உள்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை

1 min read
India bans 59 Chinese processors, including Tick Talk, Share It, Browser, UC

30-6-2020

இந்தியாவில் டிக் டாக், ஷேர் இட், பிரவுசர், யு.சி. உள்பட 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்தது மற்றும் இந்திய வீரர்களை கொன்றது போன்ற சம்பவங்கள் சாதாரண இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சீன பொருட்களை வாங்கக்கூடாது என்று பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
பலர் சீன பொருட்களை வாங்குவதை தடுத்தனர். செல்போனில் உள்ள சீன செயலிகளை பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

செயலிகளுக்கு தடை

இந்தி நிலையில் செல்போனில் 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏ ( Information Technology Act ) பிரிவை பயன்படுத்தி செல்போன் செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த செயலிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரிலும் அணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது

இதன்படி, ‘டிக் டாக், ஷேர் இட், யு.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யு., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ., கம்யூனிட்டி, சி.எம்., பிரவுசர்.மேலும், வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர், செல்பி சிட்டி, வீ சின்க், விவா வீடியோ, டி.யு., ரெக்கார்டர், கேம் ஸ்கேன்னர், கிளீன் மாஸ்டர்’ உள்ளிட்ட, 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் செல்போன் இணைய பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தடைசெய்யப்பட்ட செல்போன் செயலிகள் வருமாறு:-

  1. TikTok
  2. Shareit
  3. Kwai
  4. UC Browser
  5. Baidu map
  6. Shein
  7. Clash of Kings
  8. DU battery saver
  9. Helo
  10. Likee
  11. YouCam makeup
  12. Mi Community
  13. CM Browers
  14. Virus Cleaner
  15. APUS Browser
  16. ROMWE
  17. Club Factory
  18. Newsdog
  19. Beutry Plus
  20. WeChat
  21. UC News
  22. QQ Mail
  23. Weibo
  24. Xender
  25. QQ Music
  26. QQ Newsfeed
  27. Bigo Live
  28. SelfieCity
  29. Mail Master
  30. Parallel Space
  31. Mi Video Call – Xiaomi
  32. WeSync
  33. ES File Explorer
  34. Viva Video – QU Video Inc
  35. Meitu36. Vigo Video
  36. New Video Status
  37. DU Recorder
  38. Vault- Hide
  39. Cache Cleaner DU App studio
  40. DU Cleaner
  41. DU Browser
  42. Hago Play With New Friends
  43. Cam Scanner
  44. Clean Master – Cheetah Mobile
  45. Wonder Camera
  46. Photo Wonder
  47. QQ Player
  48. We Meet
  49. Sweet Selfie
  50. Baidu Translate
  51. Vmate
  52. QQ International
  53. QQ Security Center
  54. QQ Launcher
  55. U Video
  56. V fly Status Video
  57. Mobile Legends
  58. DU Privac

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.