May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள்-4 ( நாடகம்/ கடையம் பாலன்)

1 min read

Amuthavin Aadaikal-4 / Drama by Kadayam Balan

காட்சி 4

இடம்- அசோக்குமார் வீடு

பங்கேற்பவர்கள்- அசோக்குமார், அமுதா

===========

அமுதா:( சிறப்பான அலங்காரத்துடன்) என்னங்க இன்னிக்கு நான் எப்படி இருக்கிறேன்.

அசோக்குமார்: ஆஹா தங்க விக்ரம் மாதிரி தகதகன்னு ஜொலிக்கிறியே. என்ன இன்னிக்கு தனி மேக்கப். எங்கேயாவது கல்யாண வீட்டுக்கு போறீயா?

அமுதா: என்ன மறந்து போச்சா. இன்னிக்கு நமக்கு கல்யாண நாள்.

அசோக்குமார்: மறக்க முடியுமா? நான் மட்டுமில்ல எவனாலையும் அவன் கல்யாண நாளை மறக்க முடியாது.

அமுதா: இன்னிக்கு எனக்கு என்ன பரிசு வாங்கி வந்திருக்கீங்க.

அசோக்குமார்: போன வாரமே ஒரு சேலை வாங்கி பீரோவில வைச்சேனே. அதை எடுத்துக்கிட்டு வா. உனக்கு பிரசன்ட் பண்றேன்.

அமுதா: அது கல்யாண நாளைக்கு எடுத்ததா?… அதை அன்னிக்கே கோவிலுக்கு உடுத்திட்டு போயிட்டேங்க. (கொஞ்சலா) இன்னிக்கு ஏதாவது வாங்கலியா?

அசோக்குமார்: இந்த மாதிரி அமைதியாக அன்பா கேட்டா என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவேன்.

அமுதா: நான் உங்களுக்கு என்ன வாங்கி வந்திருக்கேன் பாருங்க. ( பேன்ட்-சட்டை உள்ள ஒரு அட்டைப்பெட்டியை கொடுக்கிறாள்)

அசோக்குமார்: பேன்ட்-சட்டையா, எவ்வளவு இருக்கும்?

அமுதா: இதுவா விலை கூடினதுதாங்க. பதினைந்து ஆயிரம்.

அசோக்குமார்: அடேங்கப்பா அவ்வளவு ரூபாயா? (துணியை பிடித்துப்பார்த்து) ஏண்டி இந்த துணிக்கு மிஞ்சி மிஞ்சிப்போனா ஆயிரம் ரூபாய்க்கு மேலே போகாதே. இதுக்கா இவ்வளவு பணம் கொடுத்தே.

அமுதா: இல்லிங்க. இந்த துணி விலை கூடினதுதான். அதோட ஒரு பொருளும் இலவசமாக தந்திருக்காங்களே.

அசோக்குமார்: இலவசமா என்ன அது?

அமுதா: ஒரு ஜோடி கம்மல்ங்க.

அசோக்குமார்: அதானே பார்த்தேன்.

அமுதா: உங்களுக்கு பேன்ட்&சட்டை எடுக்கத்தான் கடைக்கு போனேன். அதிக விலைக்கு கேட்டவுடனே இதை எல்லாத்தையும் கொடுத்தாங்க.

அசோக்குமார்: ஆமாடி மண்ணை அள்ளி பாக்கெட்ல போட்டு இலவசம்ன்னு சொன்னா பொம்பளைங்க ஏமாந்து வாங்கிக்கிட்டு போயிடுவாங்க.

அமுதா: நானெல்லாம் அப்படி கிடையாதுங்க.

அசோக்குமார்: ஆமா நீ வாங்கிட்டுவந்த தங்கத்தை உரசிப் பார்த்தாத்தான் அதன் லட்சணம் புரியும்.

அமுதா: என்னங்க இன்னிக்கும் கோபப்படறீங்களே,

அசோக்குமார்: நான் ஏம்மா கோபப்படறேன். உண்மையிலே இன்னிக்கு ஒரு தேவதை மாதிரித்தான் இருக்கே. உனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆயிட்டுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.

அமுதா: நீங்க மட்டும் என்ன குறையாம்? நீங்களும் நல்ல இளைஞன் மாதிரித்தான் இருக்கீங்க. என்னங்க இப்படி பார்க்கிறீங்க. உங்களுக்கு வரவர இளைமை திரும்புதாக்கும்.

அசோக்குமார்: உன்னைப்போல அழகான மனைவி இருந்தா என்னிக்குமே இளமையா இருக்கலாம்.

அசோக்குமார்: (உள்ளே போய் வருகிறான்) ஏண்டி பீரோவில வைச்சிருந்த 50 ஆயிரம் ரூபாயை காணோம்.

அமுதா: அதுவா… சும்மாத்தனே வீட்டுல இருக்குன்னு நான்தான் டெபாசிட் பண்ணினேன்.

அசோக்குமார்: டெபாசிட்டா என்ன உளறுதே… எந்த பேங்க்ல?

அமுதா: பேங்க்கா… அதுல எங்க வட்டி தருவான். புதுசா நம்ம ஊருல பைனான்ஸ் திறந்திருக்காங்க. அங்க பணத்தை டெபாசிட் பண்ணினா ரெண்டே வருஷத்தில மூணு மடங்கு ஆயிடும். நல்ல இடத்தில பணத்தை போட்டிருக்கேன். அதுக்குப்போய் என்னை திட்டுறீங்களே.

அசோக்குமார்: நினைச்சேன் பொம்ள சிரிப்பிலேயும் அலங்காரத்திலேயும் ஆபத்து இருக்கும்ன்று நினைச்சேன். ஏண்டி நாளைக்கு பேங்கல கட்டறதுக்காக அந்த பணத்தை வைச்சிருந்தேன். இப்படி வீணாக்கிட்டியே. நான் பணத்துக்கு எங்கே போவேன். சரி உன் செயினை கொடு அதை அடமானம் வைத்து பணத்தை கட்டிக்கிறேன்.

அமுதா: நகையா, அய்யய்யோ எங்க வீட்ல கஷ்டப்பட்டு செஞ்சிப்போட்ட நகைகள். எங்க அம்மா சாகும்போது இந்த நகைகளை எந்த காரணத்தைக் கொண்டும் பேங்கில வைக்க கொடுத்திடாதேன்னு சொன்னாங்க. அவங்க சாகும்போது சொன்ன வார்த்தைய நான் சாகும்வரைக்கும் மீற மாட்டேன்.

அசோக்குமார்: பின்னே ஏண்டி நான் வச்சிருந்த பணத்தை எடுத்தே?

அமுதா: அந்தப் பணத்தில எனக்கு உரிமை இல்லியா?

அசோக்குமார்: வீணாக்கிறதுக்கு உரிமை இல்லை.

அமுதா: யாரு வீணாக்கினா ரெண்டு வருஷசத்துல மூணு மடங்கு ஆயிடும்.

அசோக்குமார்: முதல்ல அந்த பைனான்ஸ் இருக்குமான்னு பாரு. இப்போ நாளைக்கு பணத்துக்கு நான் என்ன பண்ணுவேன்.

அமுதா: ஏதாவது பண்ணுங்க. யாரிடமாவது கடன் வாங்குங்க.

அசோக்குமார்: எனக்கு ஐடியா கொடுக்கிறீயா?

அமுதா: என்ன நான் உங்களுக்கு இளக்காரமா ஆயிட்டேனா. நான் சொன்னத கேட்டா இன்னும் ஐந்து வருஷசத்திலே நீங்க பெரிய பணக்காரனா ஆயிடலாம்.

அசோக்குமார்: ஆமா நீ போகிற போக்கை பார்த்தா பிச்சைக்காரனாத்தான் ஆவோம்.

அமுதா: பேசாதீங்க.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.