அமுதாவின் ஆசைகள்3 / நாடகம்/ கடையம் பாலன்
1 min read
6113-07242034 © Masterfile Royalty-Free Model Release: Yes Property Release: Yes Senior couple hugging in doorway
Amuthavin Aasaikal / drama by Kadayam Balan
இடம்- பூங்கா
பங்கேற்பவர்கள்: பவித்ரா, ஆனந்த்
…………………
பவித்ரா: (செல்போனில்) ஹலோ ஆன்ந்த்… உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறது. சீக்கிரம் வாங்க… ச்ச என்ன மனுஷன். காதலிக்காக காதலன்தான் காத்திருப்பான். இங்கே என்னடான்னா நாம காத்திருக்க வேண்டியதிருக்கு.
ஆனந்த்: (வந்தபடி) (செல்போனையும், பவித்ராவையம் உற்று நோக்கியபடி ) நீங்க… நீங்க… பவித்ராதானே.
பவித்ரா: ஆமா… நீங்க ஆனந்த்…
ஆனந்த்: எஸ் மை டியர் பவித்ரா. நீங்க வாட்ஸ்&அப்ல அனுப்பிய போட்டோவை விட அழகாக இருக்கிங்க.
பவித்ரா: நீங்களும்தான்… ஆமா நீங்க என்னை நீ&வாபோன்னே பேசலாம்.
ஆனந்த்: சரி மை டார்லிங்.
பவித்ரா: மை லைப் ஸ்டையில் புதுமையில் பழமையா இருக்குங்க.
ஆனந்த்: நீ என்ன சொல்ற எனக்கு புரியலியே
பவித்ரா: அந்த காலத்தில கல்யாணத்துக்கு அப்புறமாத்தான் கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் பார்பாங்களாம். அத மாதிரி நாம காதலிச்சதுக்கு அப்புறம்தான் ஒருத்தரோட ஒருத்தர் படத்தை பார்த்தோம். இப்பத்தான் நேர்ல சந்திக்கிறோம்.
ஆனந்த்: நம்ம வாழ்க்கையும் அந்த காலத்து கணவன்-மனைவி மாதிரி அமையணும்.
பவித்ரா: சரி நம்ம காதல பத்தி உங்க வீட்ல சொன்னீங்களா.
ஆனந்த்: பவி.. என்னுடைய காதலுக்கு எங்க வீட்ல எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டாங்க. நான் எங்க அப்பா*அம்மாவுக்கு ஒரே பையன். நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க. இப்பவே நம்ம காதலை அவங்கக்கிட்ட சொன்னா நாம தனியா சந்திச்சி பேசறதுல ஒரு திரில் இருக்காது.
பவித்ரா: எங்க வீட்ல நம்ம காதல ஏத்துக்கிறது கஷ்டம்தான்.
ஆனந்த்: அப்படின்னா நம்ம காதல் கைக்கூடாதா-?
பவித்ரா: ஆனந்த் நீங்க கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வேலையா தேடிக்கங்க. அப்பத்தான் நம்ம காதல பத்தி வீட்ல சொல்றதுக்கு ஈசியா இருக்கும். நீங்க வேலையில இருந்தா எங்க அத்தானும் அக்காளும் சம்மதிச்சிருவாங்க.
ஆனந்த்: வேலையா-? எனக்கா? எங்க கிட்டயே நூறு பேரு வேலைபார்க்கிறாங்க.
பவித்ரா: நீங்க அவ்வளவு பெரிய பணக்காரங்களா? நான் கொடுத்து வச்சவ.
ஆனந்த்: பவி உங்க வீட்ல உனக்கு எவ்வளவு சொத்து சேரும்?
பவித்ரா: நாங்க சாதாரணமானவங்கத்தான். எங்களுக்கு 5 கோடிக்கு சொத்து இருக்கு. என் பங்கு இரண்டரை கோடி தேறும். உங்க சொத்துக்கு அது எம்மாத்திரம். அதனால அந்த பிச்சைக்கார சொத்தை நான் வேண்டான்னே சொல்லிடுவேன்.
ஆனந்த்: அய்யோ பவி, உன் சொத்து நமக்கு பெரிசு இல்லை. ஆனா அந்த சொத்து உன் பேர்ல இருந்தாத்தானே உனக்கு பெருமை.
பவித்ரா: என்னங்க நாம தனியா இருக்கிற இந்த நேரத்தில சொத்தை பற்றியா பேசறது. ஈவினிங் ஆறு மணிக்கெல்லாம் நான் ஹாஸ்டலுக்கு போகணும். அது வரைக்கும் நாம சந்தோஷமா ஜாலியா ஏதாவது பேசுவோம்.