May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள்-6/ நாடகம்/ கடையம் பாலன்

1 min read

Amuthavin Aasaikal-6 / Drama by Kadayam Balan

காட்சி  6

இடம்- சாலையோரம்

பங்கேற்பவர்கள்- முனியன், கருப்பன், கைசூப்பி கைலாசம்

=========================

கருப்பன்: (நாற்காலியை எடுத்து வருகிறான். அதைபோட்டு உட்கார்ந்து கொண்டு பேப்பர் படிக்கிறான்)

முனியன்: (வந்து) என்னல கருப்பன் சேரை நீயே கொண்டு வந்து போட்டுக்கிட்டு பேப்பர் படிக்கிற?

கருப்பன்: அண்ணன் வரவர இந்த உலகமே கெட்டுப்போச்சி. மதிப்பு மரியாதை தெரியாத பசங்க பெருகிட்டாங்க. எங்கே போனாலும் உட்காருன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க. அதான் பார்த்தேன் நாமளே ஒரு இருக்கைய கையோட கொண்டுபோயிட்டா பிரச்சினை இல்லை பாருங்க.

முனியன்: எப்பா உனக்கு கவுரவ கருப்பன்னு பேரு வைக்கலாமே.

கருப்பன்: அண்ணே நீங்க பெரியவங்க இந்த சேர்ல உட்காருங்க.

முனியன்: அப்போ உன் கவுரவம் என்ன ஆவுது.

கருப்பன்: உங்க முன்னாடி எனக்கு எதுக்கு கவுரவம். உட்காருங்க. அண்ணே அந்த காலத்தில நீங்க நாடகத்தில அசத்தினிங்களாமே.

முனியன்: ஆமா அந்த காலத்தில நாங்க எத்தனை நாடகம் போட்டிருக்கோம். அன்பே அமுதான்னு ஒரு நாடகம் போட்டோம். அந்த சமயத்திலத்தான் நம்ம அசோக்குமார் பொண்டாட்டி பிறந்தா. அதனால அந்த பிள்ளைக்கு அமுதான்னு பேரை வைச்சிட்டாங்க.

கருப்பன்: அண்ணே நம்ம கைசூப்பி கைலாசம் வர்றான்.

முனியன்: என்ன அவனை கைசூப்பின்னா சொல்லுற

கருப்பன்: அவன்கிட்ட வைச்சி யாரு சொல்லுவா. அப்படி சொன்னா கண்டபடி திட்டுவான். அடிப்பான்.

முனியன்: அதெல்லாம் ஒண்ணும் செய்ய மாட்டான்.

கருப்பன்: உங்களுக்கு தைரியம் இருந்தா அவன் முன்னாடியே கைசூப்பின்னு சொல்லணும்.

முனியன்: அப்படி சொல்லிட்டா.

கருப்பன்: அவன் உங்கள திட்டாம அடிக்காம இருக்கணும்.

முனியன்: அவன் என்னை திட்ட மாட்டான். பந்தயம் எவ்வளவு?

கருப்பன்: நூறு ரூபா.

முனியன்: சரி. அதோ வந்திட்டான். நீ அங்கே போய் நின்னுக்கோ நான் சவுண்டா அவனை கைசூப்பின்னு சொல்றேன்.

(கருப்பன் உள்ளே செல்கிறான்)

கைலாசம்:(திட்டிக்கொண்டே) பரத்தைக்கு பிறந்த  பய. உன் கை விளங்காம போக. உன் வாயி அழுகிப்போக. ஏல நீ விளங்கவே மாட்டேன்.

முனியன்: என்ன கைலாசம் யாரை திட்டிக்கிட்டே வாரே.

கைலாசம்: ஒரு பரதேசி பைய என்ன வக்கணம் சொல்லி கூப்பிடாறான்.

முனியன்: சரி சரி டென்சன் ஆகாதே. அமைதியா இரு.

கைலாசம்: உங்களுக்காக அமைதியா இருக்கேன்.

முனியன்: ஆமா கைலாசம் உன்னை எதுக்காக கைசூப்பி, கைசூப்பின் பட்டப்பேரு வச்சி கூப்பிடறாங்க.

கைலாசம்: அது ஒரு பெரிய கதை. அண்ணே அத யாருக்கிட்டேயும்  சொல்ல மாட்டீங்களே.

முனியன்: நான் ஏனப்பா சொல்லப்போறேன்.

கைலாசம்: சின்ன பிள்ளையில ஒரு நாள் என்னை பார்க்க கருப்பன் எங்க வீட்டுக்கு வந்தான்.  அப்போ நான் தூங்கிக்கிட்டு இருந்தேன். தூங்கும்போது எனக்கு கைய வாயில வைக்கும் பழக்கம் உண்டு. அதை இந்தப் பய பார்த்துட்டான். பார்த்ததை ஊரு பூராவும் பரப்பி விட்டான்.

முனியன்: ஆமா இப்பவும் கைசூப்புவியா?

கைலாசம்: அண்ணே  இதையும் யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்க. இப்பவும் நைட்ல வாயில கைய வச்சாத்தான் தூக்கமே வருது.

முனியன்: அப்போ எல்லாத்துக்கும்  காரணம் கருப்பன்தான்.

கைலாசம்: ஆமா அதுக்காக எங்கிட்ட எத்தனை அடி வாங்கி இருக்கான் தெரியுமா?

முனியன்: இப்பக்கூட அதோ அங்க ஒளிஞ்சி நிற்கான் பாரு கருப்பன். அவன் உன்னை பார்த்து கைசூப்பி, கைசூப்பி, கைசூப்பி, கைசூப்பின்னு சொல்லிக்கிட்டே இருந்தான்.

கைலாசம்: அந்த பரதேசி பய இப்பவும் சொல்றானா?  கொடுத்த கொடை காணாது. இதோ வர்றேன்.

(உள்ளே சென்று முனியனை இழுத்து வந்து அடித்து உதைக்கிறான்).

கைலாசம்: இனிமே சொன்ன கொன்னுப்புடுவேன்.

(கைலாசம் செல்கிறான்)

முனியன்: என்ன கருப்பா அவன் முன்னாடியே எத்தனை வாட்டி கைசூப்பின்னு சொன்னேன் பார்த்தியா?

கருப்பன்: என்னைய மாட்டிவிட்டு அடி வாங்க வைச்சிட்டிங்களே.

முனியன்: எப்படியோ நான் ஜெயிச்சேâனா இல்லியா. எடு நூறு ரூபாய.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.